அழிஞ்சிவாக்கம் முத்தாலம்மன் பொன்னியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு தீமிதி திருவிழா

விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.;

Update:2025-08-18 11:01 IST

திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில் 28-ம் ஆண்டு தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி வெள்ளிக்கிழமை கங்கை திரட்டி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்வான தீமிதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக நேற்று மதியம் கோவிலின் எதிரே தீ மூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த குமார மக்கள் என்று அழைக்கப்படும் பக்தர்கள் இரவில் ஊர் எல்லையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே புனித நீராடினர். அவர்களை உற்சவர் அம்மன் மங்கள வாத்தியம் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர் எல்லைக்கு சென்று கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவாகள் கோவிலை அடைந்ததும் கோவிலின் எதிரே அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் ஒருவர் பின் ஒருவராக இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் பின்னர், உற்சவர் அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அழிஞ்சிவாக்கம் ஊர் கிராம பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்