தனிஷ்க் அறிமுகம் செய்துள்ள புதுப்புது டிசைன்கள்; ஜொலிக்க வைக்கும் ‘ரிவா’ நகைகள்

திருமணம் மற்றும் பண்டிகைகளுக்காக அற்புதமான புதிய படைப்புகளை தனிஷ்க் அறிமுகம் செய்திருக்கிறது.
தனிஷ்க் நிறுவனம் டாடா குழுமத்துக்கு உட்பட்டது ஆகும். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஓரிடத்தை தரத்திலும், புதுவித டிசைன்களில் நகைகளை வழங்குவதிலும் தனிஷ்க் நிறுவனம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக கைவினை வேலைப்பாடுகளுடன் கூடிய நகைகளை உருவாக்குவதில் தனிஷ்க் நிறுவனம் சிறப்படைந்து விளங்குகிறது.
இந்திய பெண்களின் விருப்பம், அவர்களுக்கான பாரம்பரிய அழகு, சமகால எண்ணம் ஆகியவற்றை அறிந்து தனிஷ்க் நிறுவனம் நகைகளை உருவாக்கி வழங்கி வருகிறது. சுத்தமான தங்க நகைகளை வழங்கி வரும் தனிஷ்க் நிறுவனம், 300 நகரங்களில் 500-க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.
தனிஷ்க் நிறுவனம் சார்பில் ‘ரிவா’ என்ற பெயரில் தென்னிந்திய திருமண வைபவங்களை சிறப்புக்குரியதாக மாற்றும் வகையில் புதிய காசுமாலை மற்றும் ‘டெம்பிள் ஜுவல்லரி’ என்று அழைக்கப்படும் பாரம்பரிய தென்னிந்திய நகைகள் புதுப்புது டிசைன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தென்னிந்திய திருவிழாக்கள், பண்டிகைகள், திருமண நிகழ்ச்சிகளுக்கு ‘ரிவா’ வகை நகைகள் வாடிக்கையாளர்களுக்கு மெச்சத்தகுந்த புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இது ஒரு பாரம்பரிய, கலாசார டிசைன்கள் ஆகும். பண்டிகை காலத்தையொட்டி வாடிக்கையாளர்களுக்காக தென்னிந்தியா முழுவதும் ‘ரிவா’ வகை நகைகள் அறிமுகம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
நவீன கால திருமணங்களை தென்னிந்திய பாரம்பரியத்துடன் ஆடம்பரமாக கொண்டாடவும், பண்டிகைகளை பாரம்பரியம் மற்றும் கலாசாரம் மாறாமல் கொண்டாடவும் வாடிக்கையாளர்களின் கற்பனைக்கு எட்டாத வகையில் புதிய டிசைன்களில் தனிஷ்க் நிறுவனம் நகைகளை அறிமுகம் செய்துள்ளது.
திருமணம் மற்றும் பண்டிகைகளுக்காக அற்புதமான புதிய படைப்புகளை தனிஷ்க் அறிமுகம் செய்திருக்கிறது. பாரம்பரிய முறையில் நுண்ணிய கைவினை திறன் வேலைப்பாடுகளுடன் நவீன டிசைன்களின் ரிவா நகைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
ரிவா நகைகளை வாங்க இதுதான் சரியான தருணம். ஏனெனில் தசரா, தீபாவளி மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் வருகிறது. இதில் ஒவ்வொரு தருணத்தையும் ஆடம்பரமாகவும், பாரம்பரிய முறையிலும், திருமண நாளில் மணமகளை அலங்கரிக்கவும் ரிவா நகைகள் தேவைப்படுகிறது. ரிவா நகைகள் மணமகளை திருமணத்திற்கு முந்தைய சடங்குகளிலும் சரி, அதன்பிறகு நடக்கும் பிரமாண்ட திருமண விழாவிலும் சரி உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இதயத்துடிப்பான இந்த காலக்கட்டத்தில் ‘ரிவா’ நகைகளில் புதுவித கற்பனையுடன் கலந்த காசுமாலை மற்றும் ‘டெம்பிள் ஜுவல்லரி’ நகைகள் ஒவ்வொரு திருமணத்திலும் மங்களகரமான மகிழ்வை அளிக்கும். புதுவித டிசன்களில் ஆரம், நெக்லஸ், மணப்பெண் வளையல்கள், ஒட்டியானம், ஜிமிக்கிகள், தோடுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நகையும் நுண்ணிய கைவினை வேலைப்பாடுகளுடன் பழங்கால முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது ரிவா வகை தங்க நகைகள் பழங்கால முறையில் பாரம்பரிய வடிவில் வைர கற்கள் சேர்க்கப்பட்டு நவீன கால மணப்பெண்ணை அக்கால மணப்பெண்கள் போல் அலங்கரிக்கும்.
அவை நவீன காலத்தையும், பழங்கால பாரம்பரியத்தையும் ஒருசேர நிலைப்படுத்தி மணப்பெண்களை அழகுற காட்டும்.
அதுமட்டுமின்றி தினசரி பயன்பாட்டுக்கான பலவித நகைகள், தோடுகள், எடைகுறைந்த சிறிய செயின்கள், மோதிரங்கள், மிகுந்த நுண்ணிய வடிவிலான வளையல்கள், கை செயின்கள் ஆகியவை தங்கத்திலும், வைரத்திலும் உள்ளன. அலுவலக பணிக்கு செல்வோர், பொது இடங்களுக்கு சாதாரணமாக செல்வோருக்கென இந்த வகை நகைகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த பண்டிகை கால சலுகையாக தங்க நகை பரிமாற்ற திட்டம் தனிஷ்க் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது பழைய நகைகளை கொடுத்தால், அது எந்தவித காரட்டாக இருந்தாலும் சரி, எந்த நகைக்கடையில் வாங்கி இருந்தாலும் சரி அதை அப்படியே 100 சதவீத விலையில் பெற்றுக் கொள்வோம். ஒரு சதவீதம் கூட அதிலிருந்து சேதாரம் கழிக்கப்படாது. மேலும் அதற்கான மதிப்பில் அப்படியே புதுவித நகைகளை வடிக்கையாளர்கள் வாங்கி செல்லலாம். மேலும் தங்க நகைகளில் ஒரு கிராமுக்கு ரூ.450-ம் வைர நகைகளுக்கு 20 சதவீதம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த சலுகை வருகிற 21-ந் தேதி வரை கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருக்கும்.
இதுபற்றி தனிஷ்க்கின் முதன்மை டிசைன் அதிகாரி ரேவதி காந்த் கூறுகையில், ‘தென்னிந்திய பெண்கள் மற்றும் மணமகள்கள் காலத்தை கடந்து புதுவித அழகுடன் தோற்றமளிக்கும் வகையில் ரிவா நகைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. காசுமாலை, டெம்பிள் ஜுவல்லரி, நகாஷி மற்றும் பல அடுக்கு வகையிலான கைவினை திறனுடன் உருவாக்கப்பட்ட நகைகள் பாரம்பரிய அழகுடன் தற்காலத்தையுன் தொடர்புபடுத்தி மணப்பெண்களை அழகு பதுமைகளாக காட்டுகிறது. மணமகள் நகைகள் தவிர தினசரி பயன்பாட்டுக்கான நகைகளும் உள்ளன’ என்றார்.
-விதிமுறைகளுக்கு உட்பட்டது.






