துபாயில் கோலாகல திறப்பு விழா ‘பேந்தர் ஹப்’ & ‘ஏ.டி.கே ஸ்கொயர்’ உணவகத்தை திறந்து வைத்தார் ஷாருக்கான்


துபாய் தேராவில் ஜுவல் ஆப் கிரீக் வளாகத்தில் அமைந்த ‘பேந்தர் ஹப்’ மற்றும் ‘ஏ.டி.கே ஸ்கொயர்’ உணவகங்களை நடிகர் ஷாருக்கான் பிரமாண்ட விழாவில் திறந்து வைத்தார்.

துபாய் தேராவில் ஜுவல் ஆப் கிரீக் வளாகத்தில் நிறுவப்பட்ட 'பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே ஸ்கொயர் உணவக திறப்பு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கண்ணன் ரவி குழுமத்தின் (கே.ஆர்.ஜி) சார்பில் தேரா பகுதியில் உள்ள ஜுவல் ஆப் கிரீக் வளாகத்தில் 'பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே ஸ்கொயர் உணவகம் நிறுவப்பட்டது. பேந்தர் ஹப் என்பது உணவகத்துடன் கூடிய மனமகிழ் மன்றமாக உருவாக்கப்பட்டுள்ளது..

அதேபோல ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் உணவு வகைகளை வழங்கும் விதமாக ஏ.டி.கே ஸ்கொயர் என்ற பெயரில் உணகவமும் நிறுவப்பட்டது.

இந்த பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே ஸ்கொயர் உணவகத்தை திறந்து வைக்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வருகை புரிந்தார்.

அவரை கே.ஆர் குழுமத்தின் தலைவர் கண்ணன் ரவி மற்றும் பராக் ரெஸ்டாரண்ட் மேலாண்மை இயக்குனர் தீபக் ரவி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பிறகு அந்த நிறுவனங்களை நடிகர் ஷாருக்கான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பிரமாண்ட திறப்பு விழாவில் அவரை காண ஏராளமான ரசிகர் கூட்டம் குவிந்தது.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர் ஜோ லேபரோவின் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அவருடன் கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி நடிகையும், நடனக்கலைஞருமான நோரா பத்தேஹி கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.


தொடர்ந்து 2 வது நாளும் அந்த வளாகத்தில் திறப்பு விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்தது. இதில் குஷ்பு, ரோஜா, ஆர்.கே செல்வமணி, ஜெய், ஜெயப்பிரகாஷ், லைக்கா சுபாஸ்கரன், யுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சித்ரா லட்சுமணன், சுப்பு பஞ்சு, வைபவ், அஜய் ராஜ், ராஜீவ் கோவிந்தன், மாதம்பட்டி ரங்கராஜ், அரவிந்த் ஆகாஷ் மற்றும் வழக்கறிஞர் விஜயன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் வருகை புரிந்திருந்தனர்.

1 More update

Next Story