யோகா கனெக்ட் சர்வதேச மாநாடு.. பிரபல யோகா மாஸ்டர்கள் பங்கேற்பு


யோகா கனெக்ட் சர்வதேச மாநாடு.. பிரபல யோகா மாஸ்டர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 Jun 2025 2:32 PM IST (Updated: 15 Jun 2025 2:33 PM IST)
t-max-icont-min-icon

யோக கலையில் செல்வாக்கு மிக்க பிரபலங்களை ஒன்றிணைத்து அவர்களின் கருத்துக்கள், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் மாநாடு நடத்தப்பட்டது.

ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் யோகா குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் உலக மக்கள் அறிந்துகொண்டு பயனடைவதற்காக ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான யோகா தின கவுண்ட்டவுன் தொடங்கி உள்ளது.

சர்வதேச யோகா தினத்தன்று உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த யோகா அமர்வுகள் நடைபெற உள்ளன. 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா' என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டின் யோகா நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகள், பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

அவ்வகையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 'யோகா கனெக்ட்' என்ற தலைப்பில் உலகளாவிய உச்சிமாநாடு நடைபெற்றது. யோக கலையில் செல்வாக்கு மிக்க பிரபலங்களை ஒன்றிணைத்து அவர்களின் கருத்துக்கள், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சி கவுன்சிலால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற யோகா மாஸ்டர்கள் மற்றும் இயற்கை மருத்துவத் துறையின் நிபுணர்கள் என ஏராளமானோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

இந்தியாவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்ய உள்ளனர். சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story