மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: குடெர்மிடோவா ஜோடி சாம்பியன்


மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: குடெர்மிடோவா ஜோடி சாம்பியன்
x

image courtesy: twitter/@WTA

இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

ரியாத்,

டாப்-8 வீராங்கனைகள் மற்றும் ஜோடிகள் பங்கேற்ற மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் வெரோனிகா குடெர்மிடோவா (ரஷியா)-எலிசி மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஜோடி டிமா பாபோஸ் (ஹங்கேரி)-லூசா ஸ்டெபானி (பிரேசில்) இணையுடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய குடெர்மிடோவா ஜோடி 7-6 மற்றும் 6-1 என்ற நேர்செட்டில் டிமா பாபோஸ் (ஹங்கேரி)-லூசா ஸ்டெபானி (பிரேசில்) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

1 More update

Next Story