மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கோகோ காப் முதல் வெற்றி


மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கோகோ காப் முதல் வெற்றி
x

கோப்புப்படம்

மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.

ரியாத்,

டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஸ்டெபி கிராப்’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினியை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தார். பாவ்லினிக்கு இது 2-வது தோல்வியாகும்.

முன்னதாக ‘செரீனா’ பிரிவில் நேற்று முன்தினம் நடந்த ஒரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் மேடிசன் கீஸ்சை வீழ்த்தினார். 2-வது தோல்வியை தழுவிய மேடிசன் கீஸ் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார்.

இந்த பிரிவில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா இரு வெற்றியுடன் ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்டார். இன்று நடக்கும் கடைசி லீக்கில் அனிசிமோவா- ஸ்வியாடெக் (போலந்து) மோதுகிறார்கள. இதில் வெற்றி பெறுபவர் இந்த பிரிவில் இருந்து 2-வது வீராங்கனையாக அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்.

1 More update

Next Story