விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜானிக் சினெர்

கோப்புப்படம்
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சினெர், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் உடன் மோத உள்ளார்.
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டிவிட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஜோகோவிச் (செர்பியா) - ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சினெர் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சினெர், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் உடன் மோத உள்ளார்.
Related Tags :
Next Story