விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்


விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

ஜோகோவிச் , இத்தாலி வீரர் பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நோவக் ஜோகோவிச் (செர்பியா ), இத்தாலி வீரர் பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6(6) -7(8), 6-2, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இதனால் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் .

1 More update

Next Story