விம்பிள்டன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அனிசிமோவா

image courtesy:twitter/@Wimbledon
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் சபலென்கா (பெலாரஸ்)- அனிசிமோவா (அமெரிக்கா) மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். இதனையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற 3-வது செட்டை அனிசிமோவா கைப்பற்றினார். முடிவில் அனிசிமோவா 6-4, 4-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story