அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அமன்டா அனிசிமோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அமன்டா அனிசிமோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

image courtesy:twitter/@usopen

இறுதிப்போட்டியில் சபலென்கா - அனிசிமோவா பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை ஒசாகா கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்டுகளை அனிசிமோவா கைப்பற்றி வெற்றி பெற்றார். அனிசிமோவா இந்த ஆட்டத்தில் 6-7, 7-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் சபலென்கா - அனிசிமோவா பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

1 More update

Next Story