அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்

செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர்.
நியூயார்க்,
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் , ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6-4, 7(7)-6(4) ,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் .
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெலிக்ஸ் ஆகரை வீழ்த்தி ஜானிக் சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story