முன்னணி வீரர்கள் பங்கேற்கும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்


முன்னணி வீரர்கள் பங்கேற்கும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்
x

முதல் நாளில் அல்காரஸ்- அலெக்ஸ் டி மினார், மோதுகிறார்கள்.

துரின்,

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. இதன்படி 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் இன்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி ஜிம்மி கனோர்ஸ் பிரிவில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), நோவக் ஜோகோவிச் (செர்பியா), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), அலெக்டிஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) ஆகியோரும், ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) பென் ஷெல்டன் (அமெரிக்கா), மற்றொரு தகுதி நிலை வீரர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

.

18-வது முறையாக இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 38 வயதான ஜோகோவிச் 8-வது முறையாக பட்டத்தை வெல்ல முயற்சிப்பார். ஆனால் இளம் சூறாவளிகள் அல்காரஸ், சினெரின் சவாலை தாண்டி சாதிப்பது கடினமே.

முதல் நாளில் அல்காரஸ்- அலெக்ஸ் டி மினார், அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-பென் ஷெல்டன் மோதுகிறார்கள்.

1 More update

Next Story