குயின்ஸ் கிளப் டென்னிஸ்: அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்ட மேடிசன் கீஸ்


குயின்ஸ் கிளப் டென்னிஸ்: அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்ட மேடிசன் கீஸ்
x

கோப்புப்படம்

முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஜெர்மனியின் டாட்ஜானா மரியா உடன் மோதினார்.

லண்டன்,

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஜெர்மனியின் டாட்ஜானா மரியா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேடிசன் கீஸ் 3-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் டாட்ஜானா மரியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

1 More update

Next Story