40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி வீராங்கனை

image courtesy: Internazionali BNL d'Italia twitter
இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினி, கோகோ காப்பை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ரோம்,
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் கோகோ காப் (அமெரிக்கா), 5-ம் நிலை வீராங்கனையான ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) எதிர்கொண்டார்.
1 மணி 29 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாவ்லினி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் கோகோ காப்பை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை ஒருவர் இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 1985-ம் ஆண்டு ரபேல்லா ரெக்கி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
Related Tags :
Next Story