மாண்ட்ரியல் ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


மாண்ட்ரியல் ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

மாண்ட்ரியல் ஓபன் டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.

டொராண்டோ,

மாண்ட்ரியல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவின் டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைத்த விம்பிள்டன் சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-1 என்ற நேர் செட்டில் குவ் ஹன்யூவை (ஸ்பெயின்) வெளியேற்றி 3-வது சுற்றை அடைந்தார்.

இதே போல் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் லுலு சன்னை (நியூசிலாந்து) சாய்த்தார். ஸ்விடோலினா (உக்ரைன்), எம்மா ரடுகானு (இங்கிலாந்து), கரோலினா முச்சோவா (செக்குடியரசு) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

1 More update

Next Story