மியாமி ஓபன் டென்னிஸ்:சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


மியாமி ஓபன் டென்னிஸ்:சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

Image : @MiamiOpen

தினத்தந்தி 28 March 2025 10:04 AM IST (Updated: 28 March 2025 12:28 PM IST)
t-max-icont-min-icon

அரினா சபலென்கா,இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

மியாமி,

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா,இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-2, 6-2 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


Next Story