மியாமி ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா சாம்பியன்

அரினா சபலென்கா, அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
மியாமி,
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய சபலென்கா 7-5, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் . இது அரினா சபலென்கா வென்ற முதல் மியாமி ஒபன் பட்டம் ஆகும்.
இந்த வெற்றி தொடர்பாக அரினா சபலென்கா கூறியதாவது,
இறுதிப் போட்டியில் எனது சிறந்த டென்னிஸை விளையாட முடிந்தது. இந்த அழகான கோப்பையை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் இவ்வாறு அரினா சபலென்கா கூறினார்.
Related Tags :
Next Story