மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கின்வென் ஜெங் அதிர்ச்சி தோல்வி


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்:  கின்வென் ஜெங் அதிர்ச்சி தோல்வி
x

அரினா சபலென்கா 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் அனா பிளிங்கோவாவை (ரஷியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கின்வென் ஜெங் (சீனா) 4-6, 4-6 என்ற நேர் செட்டில் அனஸ்டாசியா பொடாபோவாவிடம் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி கண்டார்.

1 More update

Next Story