மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.79 கோடியாகும்.
மாட்ரிட்,
பிரெஞ்சு ஓபனுக்கு முன்னோட்டமாக களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்பெயினில் இன்று தொடங்கி மே 4-ந்தேதி வரை நடக்கிறது. ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.79 கோடியாகும்.
இதில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), 3-ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஆர்தர் பில்ஸ் (பிரான்ஸ்), டேனில் மெட்விடேவ், ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) ஹோல்கர் ருனே (டென்மார்க்), முசெட்டி (இத்தாலி) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் 'பை' சலுகை மூலம் நேரடியாக 2-வது சுற்றில் கால்பதிக்கிறார்கள்.
Related Tags :
Next Story