மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் விலகல்.. காரணம் என்ன..?


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் விலகல்.. காரணம் என்ன..?
x

image courtesy:PTI

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

மாட்ரிட்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), கேப்ரியல் டியாலோ (கனடா) உடன் மோத இருந்தார்.

இருப்பினும் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் தொடரில் இருந்து விலகினார். இதனால் கேப்ரியல் டியாலோ விளையாடாமலே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

1 More update

Next Story