இத்தாலி ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் சாம்பியன்


இத்தாலி ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் சாம்பியன்
x

image courtesy: Internazionali BNL d'Italia twitter

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர், கார்லஸ் அல்காரசை எதிர்கொண்டார்.

ரோம்,

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 'நம்பர் ஒன்' வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி), 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரசை (ஸ்பெயின்) எதிர்கொண்டார். 1 மணி 43 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட்டில் சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சாம்பியன் பட்டம் வென்ற அல்காரசுக்கு ரூ.9½ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த சின்னருக்கு ரூ.5 கோடி கிட்டியது.

1 More update

Next Story