சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

இந்த சர்வதேச போட்டி 30-ந் தேதி வரை நடக்கிறது
சென்னை,
உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மொத்தம் ரூ.2.35 கோடி பரிசுத் தொகைக்கான இந்த சர்வதேச போட்டி 30-ந் தேதி வரை நடக்கிறது. ஆண்கள், பெண்கள் ஒற்றையர், ஆண்கள், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 5 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. 20 நாடுகளை சேர்ந்த 192 முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் சரத் கமல், சத்யன், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா உள்ளிட்ட 30 இந்திய வீரர், வீராங்கனைகளும் அடங்குவார்கள்.
காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவரான சென்னையை சேர்ந்த 42 வயதான சரத் கமல் இந்த தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story