ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: விக்டோரியா எம்போகோ சாம்பியன்


ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: விக்டோரியா எம்போகோ சாம்பியன்
x

image courtesy:twitter/@WTA

தினத்தந்தி 3 Nov 2025 4:10 PM IST (Updated: 3 Nov 2025 4:21 PM IST)
t-max-icont-min-icon

இறுதிப்போட்டியில் எம்போகோ - புக்ஸா மோதினர்.

விக்டோரியா,

பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் விக்டோரியா எம்போகோ (கனடா) - கிறிஸ்டினா புக்ஸா (ஸ்பெயின்) மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. ஆனால் அந்த செட்டை எம்போகோ எளிதில் கைப்பற்றினார்.

எம்போகோ இந்த ஆட்டத்தில் 7-5, 6-7 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

1 More update

Next Story