பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பிரான்ஸ் வீரரை சந்திக்கும் ஜன்னிக் சினெர்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பிரான்ஸ் வீரரை சந்திக்கும் ஜன்னிக் சினெர்
x

கோப்புப்படம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் வருகிற 25-ந்தேதி தொடங்கி ஜூன் 8-ந்தேதி வரை நடக்கிறது.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் வருகிற 25-ந்தேதி தொடங்கி ஜூன் 8-ந்தேதி வரை நடக்கிறது. களிமண்தரை போட்டியான இதில் யார்-யாருடன் மோதுவது என்பதை நிர்ணயிக்கும் குலுக்கல் (டிரா) நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரான இத்தாலியின் ஜன்னிக் சினெர், முதல் சுற்றில் பிரான்சின் ஆர்தர் ரின்டர்க்நெச்சை சந்திக்கிறார். 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜப்பானின் நிஷிகோரியுடன் மோதுகிறார். ஒலிம்பிக் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு முதல் சுற்றில் மெக்கென்சி மெக்டொனால்டுடன் (அமெரிக்கா) மோத உள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து), முதல் சுற்றில் ரெபேக்கா ஸ்ரம்கோவாவுடன் (சுலோவக்கியா) மோதுகிறார். நம்பர் ஒன் வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), கமிலா ரகிமோவாவுடன் (ரஷியா) மோத உள்ளார். உலக தரவரிசையில் 2-வதுஇடம் வகிக்கும் அமெரிக்காவின் கோகா காப் ஆஸ்திரேலியாவின் ஒலிவியா கேடெக்கியை எதிர்கொள்கிறார்.

1 More update

Next Story