பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஹோல்கர் ரூனே


பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஹோல்கர் ரூனே
x

ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அல்காரசை வீழ்த்தி ஹோல்கர் ரூனே வெற்றி பெற்றார்.

பார்சிலோனா,

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 2 முறை சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ், 13-ம் நிலை வீரரான ஹோல்கர் ருனேவை (டென்மார்க்) சந்தித்தார்.

1 மணி 40 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஹோல்கர் ருனே 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட்டில் அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்து கோப்பையை சொந்தமாக்கினார். அவருக்கு இது 5-வது சர்வதேச பட்டம். அதே சமயம் 500 தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய போட்டியில் ருனே மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும்.

அவருக்கு ரூ.5¼ கோடியும், 2-வது இடம்பிடித்த அல்காரசுக்கு ரூ.2¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. தோல்வியின் மூலம் அல்காரஸ் இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் ஒரு இடம் குறைந்து 3-வது இடத்துக்கு தள்ளப்படுகிறார்.

1 More update

Next Story