உலக டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வி


உலக டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை  மணிகா பத்ரா தோல்வி
x

உலக டேபிள் டென்னிஸ் தோகாவில் நடந்து வருகிறது

தோகா,

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் தரவரிசையில் 46-வது இடத்தில் இருக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா 8-11, 7-11, 5-11, 8-11 என்ற செட் கணக்கில் 130-ம் நிலை வீராங்கனையான பார்க் கயோனிடம் தோற்று ஏமாற்றம் அளித்தார்.

இதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனை தியா சிதாலே 3-11, 7-11, 6-11, 11-6, 5-11 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சென் சிங்கிடம் தோல்வி அடைந்து நடையை கட்டினார்.

1 More update

Next Story