உலக ரேபிட் செஸ்: இந்தியாவுக்கு 2 பதக்கம்..குகேஷ், பிரக்ஞானந்தா ஏமாற்றம்


உலக ரேபிட் செஸ்: இந்தியாவுக்கு 2 பதக்கம்..குகேஷ், பிரக்ஞானந்தா ஏமாற்றம்
x

நார்வே வீரர் கார்ல்சென் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்

தோகா,

உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் முதலில் ரேபிட் வடிவிலான போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

13 சுற்றுகளை கொண்ட ஓபன் பிரிவில், நார்வே வீரர் கார்ல்சென் (9 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி) முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.ரஷிய வீரர் விளாடிஸ்லாவ் 2-வது இடம் பிடித்தார்.

இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 9.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர்களான குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 20-வது இடத்துக்கும், பிரக்ஞானந்தா 8.5 புள்ளிகளுடன் 28-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.

11 சுற்றுகளை கொண்ட பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா முதல் முறையாக தங்கம் வென்றார். சீன வீராங்கனை ஜூ ஜினெர் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி 8.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.பதக்கம் வென்ற எரிகைசி, கோனெரு ஹம்பி இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரேபிட் போட்டி முடிந்த நிலையில் உலக பிளிட்ஸ் செஸ் போட்டி இன்றும், நாளையும் அதே இடத்தில் நடக்கிறது.

1 More update

Next Story