உலகக் கோப்பை செஸ்: இறுதிசுற்றின் 2-வது ஆட்டமும் ‘டிரா’


உலகக் கோப்பை செஸ்: இறுதிசுற்றின் 2-வது ஆட்டமும் ‘டிரா’
x
தினத்தந்தி 26 Nov 2025 6:45 AM IST (Updated: 26 Nov 2025 6:45 AM IST)
t-max-icont-min-icon

இறுதிசுற்றின் முதலாவது ஆட்டம் சமனில் முடிந்தது.

கோவா,

11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் வெய் யி (சீனா), ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்) இடையிலான இறுதிசுற்றின் முதலாவது ஆட்டம் சமனில் முடிந்தது. இதன் 2-வது ஆட்டத்தில் நேற்று மீண்டும் மோதினார்கள். வெள்ளைநிற காய்களுடன் ஆடிய வெய் யி 30-வது நகர்த்தலில் மறுபடியும் ‘டிரா’ செய்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க இன்று டைபிரேக்கர் நடக்கிறது.

முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ரஷியாவின் ஆந்த்ரே இசிபென்கோ 2-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுப்போவை வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தார். வெய் யி, ஜவோகிர், இசிபென்கோ ஆகியோர் இந்த போட்டியின் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

1 More update

Next Story