உலகக் கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்


உலகக் கோப்பை செஸ்:  பிரக்ஞானந்தா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

பிரக்ஞானந்தா, ஆஸ்திரேலியாவின் தெமுர் குபோகரோவை சந்தித்தார்.

கோவா,

‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இது 8 சுற்றுகளை கொண்டது. இதில் நேற்று 2-வது சுற்றில் ரைபிரேக்கர் ஆட்டங்கள் நடந்தன. இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ஆஸ்திரேலியாவின் தெமுர் குபோகரோவை சந்தித்தார்.

முதல் இரு ஆட்டங்கள் சமன் ஆன நிலையில் டைபிரேக்கரில் அதிவேகமாக காய்களை நகர்த்தும் முறை கடைபிடிக்கப்பட்டது. இதிலும் முதல் 4 ஆட்டங்களில் சமநிலை நீடித்தது. இதையடுத்து ஒதுக்கப்பட்ட மேலும் இரு ஆட்டங்களில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று ஒரு வழியாக 5-3 என்ற கணக்கில் குபோகரோவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

1 More update

Next Story