உலகக் கோப்பை செஸ்: குகேஷ் 3-வது சுற்றுக்கு தகுதி


உலகக் கோப்பை செஸ்: குகேஷ் 3-வது சுற்றுக்கு தகுதி
x

. குகேஷ் அடுத்து ஜெர்மனியின் பிரடெரிக் ஸ்வனேவுடன் மோதுகிறார்.

கோவா,

‘பிடே’ உலகக் கோப்ைப செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. 8 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 2 ஆட்டங்கள் இடம் பெறும்.

நேற்று 2-வது சுற்றின் 2-வது ஆட்டங்கள் நடந்தன. இதில் ஒரு ஆட்டத்தில் கருப்புநிற காய்களுடன் ஆடிய இந்திய கிராண்ட்மாஸ்டர் தீப்தயான் கோஷ் 46-வது நகர்த்தலில் ரஷியாவின் இயான் நெபோம்னியாட்சிக்கு அதிர்ச்சி அளித்தார்.

முதல் ஆட்டத்தில் டிரா கண்டிருந்த இந்த வெற்றியால் 3-வது சுற்றுக்குள் நுழைந்தார் . மற்றொரு இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா, ரஷியாவின் அர்செனி நெஸ்ட்ரோவை வெளியேற்றினார்.

உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ் 59-வது நகர்த்தலில் கேசிபெக் நோகர்பெக்கை (கஜகஸ்தான்) தோற்கடித்து 3-வது சுற்றை அடைந்தார். குகேஷ் அடுத்து ஜெர்மனியின் பிரடெரிக் ஸ்வனேவுடன் மோதுகிறார்.

1 More update

Next Story