உலகக் கோப்பை செஸ்: 3வது சுற்றில் குகேஷ் 'டிரா'


உலகக் கோப்பை செஸ்: 3வது சுற்றில் குகேஷ் டிரா
x
தினத்தந்தி 8 Nov 2025 2:45 AM IST (Updated: 8 Nov 2025 2:45 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் பிரடெரிக் ஸ்வனேவுடன் மோதினார்.

கோவா,

உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு சுற்றும் 2 ஆட்டங்களை கொண்டது. 3-வது சுற்றின் முதலாவது ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் பிரடெரிக் ஸ்வனேவுடன் மோதினார்.

இந்த ஆட்டம் 34-வது நகர்த்தலில் டிரா ஆனது. இன்று 2-வது ஆட்டத்தில் இவர்கள் மீண்டும் மோதுகிறார்கள். மற்றொரு இந்திய வீரர் பிரணவ் 3-வது சுற்றின் முதலாவது ஆட்டத்தில் ஸ்டிரேமாவியசை (லிதுவேனியா) தோற்கடித்தார். அவருடன் இன்றைய ஆட்டத்தில் பிரணவ் ‘டிரா’ செய்தாலே 4-வது சுற்றை எட்டி விடலாம். இதே போல் அர்ஜூன் எரிகைசி (இந்தியா) உஸ்பெகிஸ்தானின் வோகிடோவை வீழ்த்தி 1-0 என முன்னிலை வகிக்கிறார்.

1 More update

Next Story