உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்; தங்கம் வென்று சாதனை படைத்த ரவீந்தர் சிங்


உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்; தங்கம் வென்று சாதனை படைத்த ரவீந்தர் சிங்
x

2023-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியின் தனிநபர் பிரிவில் சிங் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

கெய்ரோ,

எகிப்து நாட்டில் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ரவீந்தர் சிங் (வயது 29), 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இன்று தங்க பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பிஷ்னா நகரை சேர்ந்தவரான சிங், 2023-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியின் தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அவர் இந்த போட்டியில் திறமையாக செயல்பட்டு, 569 புள்ளிகளை பெற்றார்.

தென் கொரியாவை சேர்ந்த கிம் சியாங்யாங் (556 புள்ளிகள்) வெள்ளி பதக்கம் வென்றார். ஆன்டர் அரிஸ்டார்கோவ் (556 புள்ளிகள்) வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

தொடக்கத்தில், 93 என்ற குறைந்த புள்ளிகளுடன் போட்டியை தொடங்கிய அவர், பின்னர் அடுத்த சுற்றுகளில் 98, 94, 95, 93 மற்றும் 96 என புள்ளிகளை குவித்து, 569 புள்ளிகளை எடுத்துள்ளார். 47 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

1 More update

Next Story