உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்
x

கோப்புப்படம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 65 நாடுகளை சேர்ந்த 550-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

லிவர்பூல்,

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இன்று தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது. உலக குத்துச்சண்டையில் புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் சாம்பியன்ஷிப் இதுவாகும். இதில் 65 நாடுகளை சேர்ந்த 550-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 17 பேரும் அடங்குவர்.

இந்திய தரப்பில் நட்சத்திர வீராங்கனைகள் இரண்டு முறை உலக சாம்பியனான நிகாத் ஜரீன், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான லவ்லினா போர்கோஹைன் ஓராண்டு இடைவெளிக்கு பிறகு சர்வதேச களம் திரும்புகிறார்கள். பாரீஸ் ஒலிம்பிக்கில் ஏமாற்றம் அளித்த இவர்கள் அதற்கு இந்த போட்டியில் பரிகாரம் தேட முயற்சிப்பார்கள். ஆனால் முன்னணி வீராங்கனைகள் அனைவரும் வரிந்து கட்டுவதால் கடும் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.

போட்டியில் களம் காணும் 20 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:-

பெண்கள் அணி: மீனாக்‌ஷி ஹூடா (48 கிலோ), நிகாத் ஜரீன் (51 கிலோ), சாக்‌ஷி (54 கிலோ), ஜெய்ஸ்மின் லம்ேபாரியா (57), சஞ்சு காத்ரி (60), நீரஜ் போகத் (60), சனாமச்சா சானு (70), லவ்லினா (75), பூஜா ராணி (80), நுபுர் ஷியாரன் (80 கிலோவுக்கு மேல்).

ஆண்கள் அணி: ஜதுமணி சிங் மாண்டெங்பாம் (50), பவான் பர்த்வால் (55), சச்சின் சிவாச் (60), அபினாஷ் ஜம்வால் (65), ஹிதேஷ் குலியா (70), சுமித் குண்டு (75), லக்‌ஷயா சாஹர் (80), ஜங்னூ அலாவத் (85), ஹர்ஷ் சவுத்ரி (90), நரேந்தர் பெர்வால் (90 கிலோவுக்கு மேல்).

1 More update

Next Story