மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்திய அணி சாம்பியன்


மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்திய அணி சாம்பியன்
x

image courtesy: twitter/@ProKabaddi

இந்த தொடரில் 2 முறையும் இந்திய அணியே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

டாக்கா,

11 அணிகள் இடையிலான 2-வது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி (4 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், வங்காளதேசம் (3 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், ‘பி’ பிரிவில் சீன தைபே (5 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், ஈரான் (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

அரையிறுதியில் ஈரானை வீழ்த்தி இந்தியாவும், வங்காளதேசத்தை வீழ்த்தி சீன தைபே அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீன தைபே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 35-28 என்ற புள்ளி கணக்கில் சீனை தைபேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

1 More update

Next Story