அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: மும்பை அணி 'சாம்பியன்'

Image Courtesy: @UltTableTennis
இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்- யு மும்பா அணிகள் மோதின.
அகமதாபாத்,
8 அணிகள் பங்கேற்ற 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடந்து வந்தது. நேற்றிரவு நடந்த இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்- யு மும்பா அணிகள் மோதின. இதில் நேர்த்தியாக ஆடிய மும்பை அணி 8-4 என்ற கணக்கில் ஜெய்ப்பூரை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதன் ஆண்கள் ஒற்றையர் ஆட்டங்களில் லிலியன் பார்டெட் (மும்பை) 4-11, 11-5, 11-7 என்ற செட் கணக்கில் கனக் ஜாவையும் (ஜெய்ப்பூர்), ஜீத் சந்திரா (ஜெய்ப்பூர்) 11-5, 11-8, 8-11 என்ற செட் கணக்கில் அபினந்தையும் (மும்பை), மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் பெர்னாடெட் சோக்ஸ் (மும்பை) 11-9, 10-11, 11-5 என்ற செட் கணக்கில் ஸ்ரீஜா அகுலாவையும் (ஜெய்ப்பூர்) தோற்கடித்தனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் ஆகாஷ் பால்- பெர்னாடெட் சோக்ஸ் (மும்பை) இணை 11-6, 11-5, 11-5 என்ற நேர் செட்டில் ஜீத் சந்திரா- பிரிட் ஏர்லாண்ட் (ஜெய்ப்பூர்) ஜோடியை சாய்த்தது. மகுடம் சூடிய மும்பைக்கு ரூ.60 லட்சமும், 2-வது இடம் பிடித்த ஜெய்ப்பூர் அணிக்கு ரூ.40 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.