டேபிள் டென்னிசில் இருந்து விடை பெற்ற தமிழக வீரர் சரத் கமல்

image courtesy: PTI
சரத் கமல் தனது ஓய்வு முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தார்.
சென்னை,
உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான தமிழகத்தை சேர்ந்த சரத் கமல், சக நாட்டவரான ஸ்னேஹித் சுரவஜ்ஜுலா உடன் மோதினார்.
இதில் ஸ்னேஹித் சுரவஜ்ஜுலா 11-9, 11-8 மற்றும் 11-9 என்ற செட் கணக்கில் சரத் கமலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். தோல்வியடைந்த சரத் கமல் தொடரிலிருந்து வெளியேறினார்.
அத்துடன் டேபிள் டென்னிசிலிருந்தும் விடை பெற்றுள்ளார். இந்த தொடருக்கு முன்னதாகவே சென்னையில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டியே தன்னுடைய கடைசி தொடர் என்று அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது தோல்வியை தழுவியதால் நடப்பு ஸ்டார் கன்டென்டர் தொடரில் அவரது ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அத்துடன் டேபிள் டென்னிசிலிருந்தும் ஓய்வு பெறுகிறார்.
கேல்ரத்னா, அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள சரத் கமல் காமன்வெல்த் விளையாட்டில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கமும், ஆசிய விளையாட்டில் 2 வெண்கலப்பதக்கமும், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 4 வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார். தேசிய சாம்பியன்ஷிப்பில் 10 முறை மகுடம் சூடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.