சென்னையில் மாநில கைப்பந்து போட்டி


சென்னையில் மாநில கைப்பந்து போட்டி
x

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன

சென்னை,

இந்திய கைப்பந்து அணியின் முன்னாள் முன்னணி வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த ஜி.ஸ்ரீமதி நினைவாக அவருடன் இணைந்து விளையாடிய வீராங்கனைகள் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது.

இந்த போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தின் ‘பி’ மைதானத்தில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழை) நடக்கிறது. இதன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இந்த தகவலை போட்டி அமைப்பு குழு நிர்வாகியும், முன்னாள் சர்வதேச கைப்பந்து வீராங்கனையுமான மீனா மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story