மாநில நீச்சல் போட்டி - சென்னையில் நடக்கிறது

கோப்புப்படம்
சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் குள வளாகத்தில் வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது.
சென்னை,
தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 41-வது சப்-ஜூனியர் மற்றும் 51-வது ஜூனியர் மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் குள வளாகத்தில் வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது. நீச்சலுடன், வாட்டர் போலோ, மற்றும் டைவிங் போட்டிகளும் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) அரியானாவில் நடைபெறும் சப்-ஜூனியர் மற்றும் அகமதாபாத்தில் நடைபெறும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணியை தேர்வு செய்வதற்குரிய இந்த போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் 12-ம் தேதிக்குள் www.tnsaa.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளர் டி. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story