ஒலிம்பிக் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவு நீக்கம்: இந்திய வீராங்கனைக்கு சிக்கல்


ஒலிம்பிக் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவு நீக்கம்: இந்திய வீராங்கனைக்கு சிக்கல்
x
தினத்தந்தி 5 Nov 2025 2:15 AM IST (Updated: 5 Nov 2025 2:15 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கான பந்தயம் குறைந்தபட்சம் 53 கிலோ எடைபிரிவில் இருந்து தொடங்குகிறது

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் இருந்து 49 கிலோ எடைப்பிரிவு நீக்கப்படும் என்று சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் 48 கிலோ எடைப்பிரிவுக்கு மாறினார். இந்த நிலையில் அவர் மறுபடியும் வேறு எடைப்பிரிவுக்கு மாற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் எடைப்பிரிவில் சில மாற்றங்களை செய்து சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பந்தயம் நீக்கப்பட்டுள்ளது .

பெண்களுக்கான பந்தயம் குறைந்தபட்சம் 53 கிலோ எடைபிரிவில் இருந்து தொடங்குகிறது. அடுத்த ஒலிம்பிக்கில் பெண்களுக்கு 53, 61, 69, 77, 86 கிலோ மற்றும் 86 கிலோவுக்கு மேல் என 6 பிரிவுகள் இடம்பெறுகிறது.

மணிப்பூரைச் சேர்ந்த 31 வயதான மீராபாய் சானு அனேகமாக இனி 53 கிலோ பிரிவுக்கு தன்னை தயார்படுத்துவார்.இது மீராபாய் சானுவுக்கு சிக்கலாக பார்க்கப்படுக்றது.

1 More update

Next Story