புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் 29-ந் தேதி தொடக்கம்

போட்டி நடைபெறும் இடம், அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ் உள்பட 12 அணிகள் பங்கேற்கும் 12-வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி தொடங்கும் என்று போட்டியை நடத்தும் மஷால் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது.
போட்டி நடைபெறும் இடம், அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் 10 வீரர்கள் ரூ.1 கோடியை தாண்டி விலை போனார்கள். ஒவ்வொரு அணியும், புதிய வீரர்களுடன் தீவிரமாக தயாராகி வருவதால் இந்த கபடி தொடரில் விறுவிறுப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story