புரோ கபடி லீக்: பெங்கால் வார்யார்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி

புரோ கபடி லீக் கடந்த 28ம் தேதி தொடங்கியது .
விசாகப்பட்டினம்,
புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 12-வது புரோ கபடி லீக் விசாகப்பட்டினத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது . முதற்கட்ட லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 11-ந் தேதி வரை விசாகப்பட்டினத்திலும், அடுத்த கட்ட ஆட்டங்கள் முறையே ஜெய்ப்பூர் (செப்.12-27), சென்னை (செப்.29- அக்.10), டெல்லி (அக்.11-23) ஆகிய இடங்களிலும் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் - பெங்கால் வார்யார்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய புனேரி பால்டன் அணி 45-36என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story