மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்


மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம்

இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், அயர்லாந்தின் நாட் நுயென் உடன் மோதினார்.

கோலாலம்பூர்,

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், அயர்லாந்தின் நாட் நுயென் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என்ற செட் கணக்கில் நாட் நுயெனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், இத்தாலியின் டோமா ஜூனியர் போபோவ் உடன் மோதுகிறார்.

1 More update

Next Story