மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட பி.வி.சிந்து


மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட பி.வி.சிந்து
x

கோப்புப்படம் 

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.

கோலாலம்பூர்,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, வியட்நாமின் ங்குயென் துய் லின்க் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-11 என்ற புள்ளிக்கணக்கில் ங்குயென் துய் லின்க்கும், 2வது செட்டை 21-14 என்ற புள்ளிக்கணக்கில் பி.வி.சிந்துவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.

இதில் அபாரமாக செயல்பட்ட ங்குயென் துய் லின்க் 21-15 என்ற புள்ளிக்கணக்கில் பி.வி.சிந்துவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

1 More update

Next Story