மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: தருண் மன்னேபள்ளி அரையிறுதிக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்
இந்தியாவின் தருண் மன்னேபள்ளி, சீனாவின் ஹு ஜீன் உடன் மோதினார்.
மக்காவ்,
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தருண் மன்னேபள்ளி, சீனாவின் ஹு ஜீன் உடன் மோதினார்.
இந்த போட்டியின் முதல் செட்டை 21-12 என்ற புள்ளிக்கணக்கில் தருண் மன்னேபள்ளியும், 2வது செட்டை 21-13 என்ற புள்ளிக்கணக்கில் ஹு ஜீன்னும் கைப்பற்றினார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.
இதில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இந்த செட்டில் அபாரமாக செயல்பட்ட தருண் மன்னேபள்ளி 21-18 என்ற புள்ளிக்கணக்கில் ஹு ஜீன்னை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story