மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மற்றொரு இந்திய வீரர் தருண் 21-12, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹூ ஜீயை சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மக்காவ்,
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மக்காவ் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் சீனாவின் சூயான் சென் சூவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் தருண் 21-12, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹூ ஜீயை சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 14-21, 21-13, 20-22 என்ற செட் கணக்கில் மலேசியாவின் சோங் ஹோன் ஜியான்-ஹாய்கால் முகமது ஜோடியிடம் தோற்று வெளியேறியது.
Related Tags :
Next Story