மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்தோனேசியாவின் சிகோ அவுரா வார்டோயோவை வீழ்த்தி லக்சயா சென் காலிறுதிக்குள் நுழைந்தார்.
மக்காவ்,
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மக்காவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய இளம் வீரர்லக்சயா சென் 21-14, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் சிகோ அவுரா வார்டோயோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 47-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் தருண் சரிவில் இருந்து மீண்டு 19-21, 21-14, 22-20 என்ற செட் கணக்கில் 15-ம் நிலை வீரரான லீ சியூக் யூவுக்கு (ஹாங்காங்) அதிர்ச்சி அளித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story