கேலோ இந்தியா பாரா விளையாட்டு: பளுதூக்குதலில் தேசிய சாதனை படைத்த ஜாண்டு குமார், சீமா ரானி

Image Courtesy: @kheloindia / X (Twitter)
கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகள் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகள் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரின் 5வது நாளான இன்று பளுதூக்குதல் விளையாட்டில் மகளிர் எலைட் (61 கிலோ) பிரிவில் பஞ்சாபை சேர்ந்த சீமா ரானி 97 கிலோ தூக்கி தேசிய சாதனையை படைத்தார்.
இதே போல் பளுதூக்குதல் விளையாட்டில் ஆண்கள் எலைட் (72 கிலோ) பிரிவில் பீகாரை சேர்ந்த ஜாண்டு குமார் 206 கிலோ தூக்கி தேசிய சாதனையை படைத்தார்.
இந்த தொடரில் தற்போது வரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் பதக்க பட்டியலில் அரியான (29 தங்கம்) முதல் இடத்திலும், தமிழகம் (24 தங்கம்) 2வது இடத்திலும், ராஜஸ்தான் (22 தங்கம்) 3வது இடத்திலும் உள்ளன.
Related Tags :
Next Story