சர்வதேச பேட்மிண்டன்: இந்திய ஜோடி சாம்பியன்


சர்வதேச பேட்மிண்டன்: இந்திய ஜோடி  சாம்பியன்
x

இந்திய ஜோடிக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

லக்னோ,

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிசுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் திரிசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் காகோ ஒசாவா- மை தனாபே இணையுடன் மோதியது.

இதில் முதல் செட்டை இழந்த இந்திய ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 17-21, 21-13 மற்றும் 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்திய ஜோடிக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

1 More update

Next Story