உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு இந்திய அணிகள் தகுதி

5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெற்றது.
புதுடெல்லி,
தெற்கு ஆசிய மண்டல டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்தது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி, வங்காளதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
இதேபோல் பெண்கள் பிரிவில் இந்திய அணி, வங்காளதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு அணிகளை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் அடுத்த ஆண்டு (2026) லண்டனில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
Related Tags :
Next Story