'எனது முதல் பயிற்சியாளருக்கு கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்' - செஸ் வீராங்கனை திவ்யா பேட்டி


எனது முதல் பயிற்சியாளருக்கு கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை சமர்ப்பிக்கிறேன் - செஸ் வீராங்கனை திவ்யா பேட்டி
x

திவ்யா மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர்.

நாக்பூர்,

ஜார்ஜியாவின் பதுமி நகரில் நடந்த 3-வது 'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய இளம் நட்சத்திரம் திவ்யா தேஷ்முக், சக நாட்டவரான கோனெரு ஹம்பியை வீழ்த்தி மகுடம் சூடினார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி இந்த தொடரில் கால்பதித்து பட்டம் வென்று வரலாறு படைத்த திவ்யா, கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தையும் எட்டி அசத்தினார்.

19 வயதான திவ்யா மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர். சொந்த ஊர் திரும்பிய அவருக்கு நாக்பூர் விமான நிலையத்தில் மேளம்தாளம் முழங்க செஸ் நிர்வாகிகள், குடும்பத்தினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் திவ்யா நிருபர்களிடம் கூறுகையில், 'ஏராளமானோர் இங்கு வந்து என்னை வரவேற்றதை பார்க்க மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. செஸ் போட்டிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதையே இது காட்டுகிறது. செஸ் விளையாட்டில் எனது முன்னேற்றத்துக்கு என்னுடைய பெற்றோரின் பங்களிப்பு அளப்பரியது. அவர்கள் இல்லாவிட்டால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. எல்லா சிறப்பும் எனது பெற்றோர், எனது சகோதரி, தாத்தா, பாட்டி மற்றும் முதல் பயிற்சியாளர் ராகுல் ஜோஷி (மராட்டியத்தின் பிரபல செஸ் பயிற்சியாளரான ராகுல் ஜோஷி 2020-ம் ஆண்டில் தனது 40-வது வயதில் மரணம் அடைந்தார்) ஆகியோரையே சாரும். ராகுல் ஜோஷி நான் கிராண்ட்மாஸ்டராக வேண்டும் என்று எப்போதும் விரும்புவார். எனது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். என்றார்.

1 More update

Next Story